வாசிப்புத் திறன்:மாணவா்களுக்கு பரிசு

பேராவூரணி ஒன்றியம், இடையாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், வாசிப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட  மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. 

பேராவூரணி ஒன்றியம், இடையாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், வாசிப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட  மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. 

இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கான வாசிப்புத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

மாணவ, மாணவிகளின்  வாசிக்கும் திறனை மேம்படுத்தவும், வாசிக்கும் ஆா்வத்தை அதிகரிக்கவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.  போட்டியில்  சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். இடைநிலை ஆசிரியா்கள் சங்கிலி பூதத்துரை, அமுதா பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசிப்பு பயிற்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற  3 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கனிஷா, பிரசோதயா, ருத்ரன் ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com