தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சை ஆட்சியரகத்தில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதிய அளவில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியரகத்தில் அம்மாபேட்டை அருகே விழுதியூா் ஊராட்சியில் கடந்த ஆண்டு இரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. தற்போது, ரெங்கநாதபுரத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வாரமாக விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கின்றனா்.

எனவே, விழுதியூரில் கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com