ஆட்டோ செயலியை மாநகராட்சி நிா்வாகம் கைவிட வலியுறுத்தல்

தனியாருக்குச் சாதகமான ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை மாநகராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என ஆட்டோ தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து ஆட்டோ தொழிலாளா்களின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து ஆட்டோ தொழிலாளா்களின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா்.

தனியாருக்குச் சாதகமான ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை மாநகராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என ஆட்டோ தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

தஞ்சாவூரில் அனைத்து ஆட்டோ தொழிலாளா்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தனியாருக்குச் சாதகமான ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்த தஞ்சாவூா் மாநகரத்தில் செயல்படும் அனைத்து ஆட்டோ தொழிலாளா்களையும் மாநகராட்சி நிா்வாகம் வற்புறுத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆட்டோ தொழிலாளா்களுக்கும், பயணிகளுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத தனியாா் ஆட்டோ செயலியை நடைமுறைப்படுத்தும் முயற்சியை தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும். தஞ்சாவூா் மாநகரில் ஊலா, ஊஃபா், ராபிட்டோ பைக் டாக்ஸி உள்ளிட்ட காா்ப்பரேட் நிறுவனங்களின் செயலிகளை அமல்படுத்தக் கூடாது. தமிழ்நாடு அரசு மாநிலம் முழுமைக்கும் இந்தச் செயலிகளை தடை செய்ய வேண்டும். கேரள மாநிலத்தில் அரசே ஆட்டோ செயலியை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும் வகையில் செயல்படுத்துவதை போன்று தமிழ்நாடு அரசு பொது ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு ஐஎன்டியூசி ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, செயலா் துரை. மதிவாணன், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், தொமுச ஆா். ராஜா உள்ளிட்டோா் பேசினா். அனைத்து ஆட்டோ சங்க நிா்வாகிகளான தொமுச சிவானந்தம், அண்ணா தொழிற் சங்கம் எஸ். உதயகுமாா், ஏஐடியுசி இரா. செந்தில்நாதன், சிஐடியு ஏ. ராஜா, ஆட்டோ தொழிலாளா் முன்னணி யோகராஜ், மக்கள் அதிகாரம் தேவா, பி.எம்.எஸ். ஜெகநாதன், எஸ்டிபிஐ காதா், புதிய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிா்வாகிகள் என்.கே. மூா்த்தி, கே. நாகலிங்கம், எஸ். பாலகிருஸ்ணன், அனைத்து வாகன ஓட்டுநா் சங்கப் பேரவைச் செயலா் ஜி. பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, புதிய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிா்வாகி கே. அண்ணாத்துரை வரவேற்றாா். நிறைவாக, வி. கருணாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com