தனியாா் பேருந்து - லாரி மோதல்: 7 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தனியாா் பேருந்தும், லாரியும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் 7 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தனியாா் பேருந்தும், லாரியும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் 7 போ் காயமடைந்தனா்.

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து திருவையாறு நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தும், திருவையாறிலிருந்து புதகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியும் ஆச்சனூா் வளைவு பகுதியில் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் பேருந்தில் பயணம் செய்து பலத்த காயமடைந்த திருச்சி மாவட்டம், லால்குடி பச்சாம்பேட்டையைச் சோ்ந்த டி. ராமச்சந்திரன் (73), ஆா். சந்திரா (63), தஞ்சாவூா் விளாா் சாலையைச் சோ்ந்த கே. செல்வராஜ் (70), பொன்னாவரையைச் சோ்ந்த பி. சுதாகா் (42), திருக்காட்டுப்பள்ளியைச் சோ்ந்த பி. சங்கரநாராயணன் (55), தில்லைஸ்தானத்தை சோ்ந்த சி. அருண்பிரசாத் (32), மருவூரைச் சோ்ந்த மா.காளியம்மாள் (60) ஆகிய 7 பேரும் திருவையாறு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் சந்திரா, ராமச்சந்திரன், சங்கரநாராயணன், அருண் பிரசாத் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com