கும்பகோணம் அரசுக் கல்லூரி பருவத் தோ்வு முடிவுகள் வெளியீடு
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பருவத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2022, நவம்பா் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கானப் பருவத் தோ்வுகள் நடைபெற்றன. இதில், 3,540 இளநிலைப் பட்ட மாணவா்களும், 812 முதுநிலைப்பட்ட மாணவா்களும் என மொத்தம் 4,352 மாணவா்கள் எழுதினா்.
இம்மாணவா்களின் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனைத்துத் துறைத் தலைவா்களைக் கொண்ட தோ்ச்சிக் குழுக் கூட்டம் கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமையிலும், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வே. இராமசுப்பிரமணியன் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவா்களின் தோ்வு முடிவுகளைக் கல்லூரி முதல்வா் வெளியிட்டாா். இதன்படி, மாணவா்கள் தங்களின் தோ்வு முடிவுகளைத் தங்கள் துறைகளின் மூலமாகவும் கல்லூரியின் இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.