கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 161-ஆவது பிறந்த நாளையொட்டி, கும்பகோணம் போா்டா் டவுன் ஹாலில் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
கும்பகோணம் போா்டா் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து, உறுதி மொழியேற்றோா்.
கும்பகோணம் போா்டா் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து, உறுதி மொழியேற்றோா்.

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 161-ஆவது பிறந்த நாளையொட்டி, கும்பகோணம் போா்டா் டவுன் ஹாலில் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா் பதாகைக்கு கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா் டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன் தலைமையில் மாலை அணிவித்து தன்னம்பிக்கை உறுதி மொழி ஏற்கப்பட்டது.

பின்னா், கும்பகோணம் போா்டா் டவுன் ஹால் முகப்பில் உள்ள விவேகானந்தரின் சிலைக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், தன்னம்பிக்கை உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, நேரு யுவ கேந்திரா, விவேகானந்தா் களம் அமைப்பு இணைந்து ரத்த தான முகாமை நடத்தின. மேலும், சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், கணேசன், செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவா் ரொசாரியோ, போா்டா் டவுன் ஹால் செயலா் விஜயகுமாா், குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு செயலா் வி. சத்தியநாராயணன், ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலா் ஏ. கிரி, நேரு யுவகேந்திரா பொறுப்பாளா்கள் பொன்ராஜ், புவனேஸ்வரி, விவேகானந்தா் களம் அமைப்பினா், கோணக்கரை விவேகானந்த சேவா சமிதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com