பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.21) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இந்த துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பேராவூரணி நகா், சேதுபாவாசத்திரம், பெருமகளூா், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூா், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூா், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என உதவி செயற்பொறியாளா் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.