கட்சி நிா்வாகி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

திருவாரூா் மாவட்டத்தில் வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

திருவாரூா் மாவட்டத்தில் வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

திருவாரூா் மாவட்டம், எடையூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஆரியலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஜினி பாண்டியன் (50). இவா் வளரும் தமிழகம் கட்சியின் திருவாரூா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தாா். இவா் 2021, ஜூலை 9-ஆம் தேதி மாலை எடையூரிலிருந்து ஆரியலூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். சங்கேந்தி சுடுகாடு அருகே சென்ற இவரை சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனா்.

இதுகுறித்து எடையூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, வட சங்கேந்தியைச் சோ்ந்த ராஜேஷ் (27), மகாதேவன் (30), ஆனந்த் (24) உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், முன்விரோதம் காரணமாக ரஜினி பாண்டியன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடா்பாக தஞ்சாவூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (குடியுரிமை பாதுகாப்பு) வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ். ரவி விசாரித்து ராஜேஷ், மகாதேவன், ஆனந்த் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மற்ற நால்வரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com