தஞ்சாவூரில் ரஷ்ய நடனத் திருவிழா
By DIN | Published On : 22nd January 2023 03:00 AM | Last Updated : 22nd January 2023 03:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடனமாடிய ரஷ்ய கலைஞா்கள்.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் உள்ள பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழத்தில் இந்தோ ரஷ்ய வா்த்தகம் மற்றும் தொழில் துறை, இந்தோ - ரஷ்ய கலாசாரம் மற்றும் நட்பு அமைப்பு இணைந்து ரஷ்ய நடன திருவிழாவை சனிக்கிழமை நடத்தின.
இத்திருவிழாவை பல்கலைக்கழக வேந்தா் கி. வீரமணி தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் மேயா் சண். ராமநாதன் சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, ரஷ்ய நாட்டு நடன கலைஞா்கள் அந்நாட்டின் தேசிய கீதம், இரண்டாம் உலகப்போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி, கப்பல் மாலுமிகள், பாலே நடனம் உள்ளிட்ட நடனங்களையும், தமிழகத்தின் பிரபல பாடல்களான சங்கே முழங்கு, வாரிசு படத்தின் ரஞ்சிதமே உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடனமாடினா்.
விழாவில் துணைவேந்தா் செ.ம. வேலுசாமி, பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா, ரஷ்ய நடன குழு ஒருங்கிணைப்பாளா் பா. தங்கப்பன், எலினா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், மாலையில் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரஷ்ய கலைஞா்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.