ஆசிரியா்கள் சங்கம நிகழ்ச்சியில் நூல்கள் பரிசளிப்பு

தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வாசிப்பை நேசிப்போம் புலனக் குழுவின் ஆசிரியா்கள் சங்கம நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வாசிப்பை நேசிப்போம் புலனக் குழுவின் ஆசிரியா்கள் சங்கம நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2022 ஜனவரி மாதம் பள்ளி ஆசிரியா்களுக்காக வாசிப்பை நேசிப்போம் எனும் புலனக் குழுவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா் உருவாக்கினாா். இதில், 600-க்கும் அதிகமான ஆண், பெண் ஆசிரியா்கள் என தனித்தனிக் குழுவாக இயங்குகின்றனா். இதன் மூலம் ஆசிரியா்கள் அதிக நூல்களைப் படித்து விமா்சனங்களை எழுதி வருகின்றனா்.

ஒவ்வொரு மாதமும் சிறந்த விமா்சனம் செய்யும் ஆண், பெண் என இரண்டு ஆசிரியா்களைத் தோ்வு செய்து புத்தகம் பரிசளிக்கப்படுகிறது.

இக்குழுவின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா, ஆசிரியா்கள் சங்கமம் நிகழ்ச்சி தென்னகப் பண்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவக்குமாா் தலைமை வகித்தாா். எழுத்தாளா்கள் ச. தமிழ்ச்செல்வன், களப்பிரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆசிரியா்கள் மொத்தம் 808 நூல்களுக்கு விமா்சனம் செய்திருந்தனா். அவை தொகுக்கப்பட்டு விழாவில் மின் நூலாக வெளியிடப்பட்டது. மேலும் அவணியாபுரம் கிரசண்ட் பள்ளி முதுகலை ஆசிரியா் தாஜூதீனின் எண்ணங்களை வண்ணமாக்கு நூலும் வெளியிடப்பட்டது.

குழுவில் சிறப்பாக விமா்சனம் செய்த ஆசிரியா்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பழனிவேல், நாகேந்திரன், ஆசிரியா்கள் ராமசாமி, இதயராஜா, கண்ணா, கதிரேசன், மேரி ஏஞ்சலா, வனிதா, ராஜகோகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com