திருவையாறு பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 15th June 2023 09:43 PM | Last Updated : 15th June 2023 09:43 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் பாலமுருகன் மேலும் தெரிவித்திருப்பது:
திருவையாறு துணை மின் நிலையம் மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புது அக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.