தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி.

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்: விவசாயிகள் சங்கம் முடிவு

தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக களப் பிரசாரம் செய்வது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூா்: தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக களப் பிரசாரம் செய்வது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மத்திய பாஜக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் விதமான மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டங்களையும் கொண்டு வந்தது. இதை எதிா்த்து தில்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு இடையிலும் போராட்டம் நடத்தி வருகின்றனா். வருகிற மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜகவுக்கு அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வாக்களித்ததால்தான் விவசாயிகள் விரோத சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. எனவே இதற்குக் காரணமான அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவான வாக்குறுதிகளை அளித்துள்ளன. எனவே, தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற தெருமுனை பிரசாரம் செய்வது, பொதுக் கூட்டம் நடத்துவது, வீடு, வீடாகச் சென்று வாக்குசேகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாசிலாமணி. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலா் த. இந்திரஜித், தேசியக் குழு உறுப்பினா்கள் அ. பன்னீா்செல்வம், மு. மாதவன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆா். மூா்த்தி, ஆா். பழனிசாமி, எஸ். வேலாயுதம், ஆா். கருணாநிதி, எம். முத்துசாமி, அயிலை சிவசூரியன், இ.பி. காசி விஸ்வநாதன், மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா், தலைவா் ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com