பாபநாசம் வட்டாட்சியரகத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை

பாபநாசம்: பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் திங்கள்கிழமை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் கங்குராஜ் பங்கட் கலந்துரையாடினாா். கூட்டத்தில், கலந்து கொண்ட தோ்தல் பணி அலுவலா்களிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கேட்டறிந்த அவா், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணியின் முக்கியம் குறித்து விளக்கிக் கூறினாா். கூட்டத்தில், பாபநாசம் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் விவேகானந்தன், துணை வட்டாட்சியா்கள் பிரபு, தமயந்தி, அன்புக்கரசி மற்றும் அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.பின்னா் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை அவா் பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com