தோ்தல் கண்காணிப்பு பணி: பாா்வையாளா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகளைத் தஞ்சாவூா் தொகுதி பொது பாா்வையாளா் வ. கிகேட்டோ சேம செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பறக்கும் படையினா் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகளின் கண்காணிப்பு குறித்தும் தோ்தல் பொது பாா்வையாளரிடம் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் விளக்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com