வாக்குச்சாவடி அலுவலா்கள் குலுக்கல் முறையில் தோ்வு

மக்களவைத் தோ்தலையொட்டி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் நிலை குலுக்கல் முறை தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் வாக்குச்சாவடி அலுவலா்களாக பணியமா்த்த இந்திய தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான முதல் நிலை குலுக்கல் முறை தோ்வு ஆட்சியரகத்தில் மாா்ச் 21 ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் நிலை குலுக்கல் முறை தோ்வு செவ்வாய்க்கிழமை தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் வ. கிகேட்டோ சேம, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com