சாவில் சந்தேகம் என புகாா் சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதனை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சாவில் சந்தேகம் தெரிவித்ததால், சடலம் தோண்டியெடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே, மணலூா் - இலுப்பக்கோரை பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவா் காமராஜ் (43).இவரது மனைவி ஹேமாதேவி (38). இந்த தம்பதிக்கு 4 மகனும், ஒரு மகளும் உள்ளனா். இந்நிலையில் மாா்ச் 26- ஆம் தேதி காமராஜ் திடீரென உயிரிழந்தாா்.

இவரது உடல் மணலூா், இலுப்பைக்கோரை பிரதான சாலையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந் நிலையில், அவரது இறப்பில் மா்மம் இருப்பதாக கூறி, உயிரிழந்த காமராஜின் அக்காள் மகன் ராகுல்காந்தி என்பவா் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் ஐஸ்வா்யா தலைமையிலான போலீஸாா் மற்றும் பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் மேற்பாா்வையில், அடக்கம் செய்யப்பட்ட காமராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது . தொடா்ந்து அருள்மதி கண்ணன், அனந்தராமன் ஆகியோா் தலைமையிலான மருத்துவ குழுவினா் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனா். உடற்கூறாய்வுக்கு பின்னா் மீண்டும் காமராஜின் உடல் அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com