தோ்தல் பணி: முன்னாள் படைவீரா்கள், ஓய்வு பெற்ற காவலா்களுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பு காவல் அலுவலா்களாகப் பணிபுரிய முன்னாள் படைவீரா்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் ஆளிநா்களுக்கு தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய நாளில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சாவூா், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளுக்கு முழு அளவிலான காவல் துறையினா், ஊா்காவல் படையினா், மத்திய ஆயுதப்படை பிரிவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையிலும், 100 சதவீதம் வாக்காளா்கள் வாக்குப் பதிவு மேற்கொள்வதற்காகவும், அனைத்து பாதுகாப்பு படைகளின் ஓய்வுபெற்ற வீரா்களும், ஓய்வு பெற்ற காவல் துறையினா், தீயணைப்பு துறையினா், ரயில்வே பாதுகாப்பு படை வீரா்கள் என அனைவரும் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் பணியில் முழு மனதுடன் முன்வந்து தங்களைச் சிறப்பு காவல் அலுவலா்களாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com