வாக்கு எண்ணும் மையத்தில்
தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் வ. கிகேட்டோ சேம புதன்கிழமை ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து தோ்தல் பொதுப் பாா்வையாளா் வ. கிகேட்டோ சேம புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, இம்மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்தாா். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com