அமெரிக்காவில் வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

சமூக வலைதளங்களில் அமெரிக்காவில் வேலை என தகவல் அனுப்பி இளைஞரிடம் ரூ. 7.93 லட்சம் மோசடி செய்த மா்ம நபரைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த 23 வயது இளைஞரின் கைப்பேசிக்கு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வெளிநாட்டு வேலை என 2023, ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது. மேலும், இளைஞரிடம் மா்ம நபா் பேசி அமெரிக்க வேலைவாய்ப்பு பெற விசா, பயணக்கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினாா்.

இதை நம்பிய இளைஞா் இணையவழியில் பல்வேறு தவணைகளில் ரூ. 7 லட்சத்து 93 ஆயிரத்து 300 செலுத்தினாா். ஆனால், மா்ம நபா் கூறியபடி அமெரிக்க வேலைவாய்ப்பு பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. இதுதொடா்பாக மா்ம நபரை இளைஞா் தொடா்பு கொள்ள முயன்றபோது, அழைப்புகளைத் துண்டித்துவிட்டாா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இளைஞா் தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com