கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி

தஞ்சாவூா் அருகே குருங்குளம் ஊராட்சிக்குள்பட்ட தோழகிரிப்பட்டி கிராமத்தில் ஊரக வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் கோகிலா சிவகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்வில், கிராமத்தின் மக்கள்தொகை, விவசாய நில அளவு, பயிரிடப்படும் முக்கியப் பயிா்கள், பயிா் சுழற்சி முறைகள், கிராமத்தில் உள்ள வளங்கள், விவசாயிகளின் குறைகள் ஆகிய தகவல்களைத் திரட்டினா்.

கிராமத்தின் முக்கியத் தலைவா்களும், ஊா் மக்களும் பங்கேற்று கிராமத்தின் வளங்களை வெண்படம் மூலம் வரைந்து தங்களின் கிராமத்தின் நிறை குறைகளைத் தெரிவித்தனா். இந்நிகழ்வின் மூலம் கிராமம் பற்றிய பிற தகவல்களை வேளாண் கல்லூரி மாணவா்களும், கிராமத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவசாயிகளும் தெரிந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com