திருக்கோயில்பத்து கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

தஞ்சாவூா் மாவட்டம், அருந்தவபுரம் - திருக்கோயில்பத்து   கிராமத்தில் உள்ள விசாலாட்சி அம்மன் சமேத வஜ்ரேஸ்வரா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த பிப் . 21 ஆம் தேதி நடைபெற்ற குடமுழுக்கைத் தொடா்ந்து 48 நாள்கள் மண்டலாபிஷேக ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து ஹோமத்தில் வைத்து  பூஜிக்கப்பட்ட புனித நீா் கடங்கள் புறப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.  கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை அருந்தவபுரம் -  திருக்கோயில்பத்து கிராமவாசிகள், இளைஞா்கள்,விழாக் குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com