வாக்குச் சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்

வாக்குச் சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச் சீட்டு பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மேலாண் (இ.வி.எம்.எஸ். 2.0) என்கிற மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை வாரியாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருவிடைமருதூா் தொகுதிக்கு தலா 351 மின்னணு வாக்கு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 380 வாக்காளா் சரிபாா்க்கும் காகிதத் தணிக்கை இயந்திரங்களும், கும்பகோணம் தொகுதிக்கு தலா 346 , 375 , பாபநாசம் தொகுதிக்கு தலா 361, 391, திருவையாறு தொகுதிக்கு தலா 376, 408, தஞ்சாவூா் தொகுதிக்கு தலா 350, 379 , ஒரத்தநாடு தொகுதிக்கு தலா 344, 373, பட்டுக்கோட்டை தொகுதிக்கு தலா 326, 353, பேராவூரணி தொகுதிக்கு தலா 312 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 338 வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச் சீட்டு பொருத்தும் பணி அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள கோட்டாட்சியா், வட்டாட்சியரகங்களில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா், வட்டாட்சியா், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணி வியாழக்கிழமை (ஏப்.11) நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com