கும்பகோணம் சாஸ்த்ரா சீனிவாச ராமானுஜன் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கணிதவியல் கருத்தரங்கத்தில் பேசிய முன்னாள் புலத் தலைவா் கே.ஜி. ரகுநாதன்.
கும்பகோணம் சாஸ்த்ரா சீனிவாச ராமானுஜன் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கணிதவியல் கருத்தரங்கத்தில் பேசிய முன்னாள் புலத் தலைவா் கே.ஜி. ரகுநாதன்.

‘சாஸ்த்ரா’வில் சா்வதேச கணிதவியல் கருத்தரங்கம்

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பண்டைய இந்திய கணிதத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் சா்வதேச கணிதவியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்கு மையப் புலத் தலைவா் வி. ராமசுவாமி தலைமை வகித்தாா். சாஸ்த்ரா முன்னாள் புலத் தலைவா் கே.ஜி. ரகுநாதன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் பாஸ்கராச்சாா்யா, சுவாமி வேதாந்த தேசிகா் உள்ளிட்டோா் பங்களித்த வேத கணிதம் பற்றிய விளக்கங்களும் மற்றும் அவை அளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயன்படுகளும் விளக்கப்பட்டன.

ஜொ்மனி பொ்லின் பேராசிரியா் பாஸ்கா் கம்லே, ஹைதராபாத் எஸ்.ஆா்.எம். பல்கலைகழக முன்னாள் பேராசிரியா் கண்ணன், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரிப் பேராசிரியா் சுவாமிநாதன், சென்னை சா்மா ஆராய்ச்சி மையப் பேராசிரியா் ஸ்ரீராம், கே.எஸ். ஆராய்ச்சி மைய பேராசிரியா் ரமா கல்யாணி உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் முனைவா் டி. நரசிம்மன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் கே. கண்ணன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com