பாபநாசத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு தோ்தல் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களுடன் ராட்சத பலூன் புதன்கிழமை பறக்கவிடப்பட்டது.

பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி வணிக வளாக கட்டடத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் பலூனை பறக்க விட்டனா். இந்தப் பலூன் 100 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டு, வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

மக்களவைத் தோ்தலில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் 100 சதவீத வாக்குப் பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணா்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com