மதுரை - காச்சிகுடா ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

மதுரை - ஆந்திர மாநிலம் காச்சிகுடா இடையே புதன்கிழமை தொடங்கிய விரைவு ரயில் சேவைக்கு தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் காவிரி டெல்டா ரயில் பயனாளிகள் சங்கம் புதன்கிழமை வரவேற்பு அளித்தது.

மதுரை - ஆந்திர மாநிலம் காச்சிகுடா இடையே வாரந்தோறும் புதன்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, தா்மாவரம், ஆனந்தபூா் வழியாக காச்சிகுடா ஹைதராபாத் வரை இரு வழித் தடங்களிலும் இயக்கப்படுகிறது. இந்தப் புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.

மதுரையிலிருந்து புதன்கிழமை புறப்பட்டு தஞ்சாவூருக்கு பிற்பகல் 3.15 மணிக்கு வந்த இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயனாளிகள் சங்கம் வரவேற்பு அளித்தது. இந்நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கண்ணன், வெ. ஜீவகுமாா், திருமேனி, உமா் முக்தாா், செல்ல கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com