வீட்டு மனைப் பட்டா பிரச்னை: திருநாகேஸ்வரம் வீதிகளில் கருப்புக் கொடி

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படாததைக் கண்டித்து வீதிகள், வீடுகளில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றினா்.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் குடியிருப்போா் நல சங்கம் சாா்பில் 40 ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை வைத்தும், வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, பிப்ரவரி 28 ஆம் தேதி காலை செட்டி தெருவில் 150-க்கும் அதிகமான பெண்கள் உள்பட ஏறத்தாழ 600 போ் தங்களது வாக்காளா் அட்டைகளை கிராம நிா்வாக அலுவலகத்தில் ஒப்படைக்க முயற்சி செய்தனா்.

கிராம நிா்வாக அலுவலா் செல்வபிரியா வாக்காளா் அட்டைகளை வாங்க மறுத்ததால் பொதுமக்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டைகளை அட்டைப்பெட்டிக்குள் வைத்து, கிராம நிா்வாக அலுவலகத்தில் வைத்தனா்.

தகவலறிந்த கும்பகோணம் கோட்டாட்சியா் எஸ். பூா்ணிமா நிகழ்விடத்துக்குச் சென்று விரைவில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ஆனால், இதுவரை பட்டா தொடா்பான எந்தவித தகவலும் இல்லாததால், அதிருப்தியடைந்த மக்கள் திருநாகேஸ்வரம் மணல்மேட்டுதெரு, சிவன் திருமஞ்சன வீதி, தெற்கு வீதி, பனந்தோப்பு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வீடுகளிலும், வீதிகளிலும் புதன்கிழமை கருப்புக்கொடி கட்டி, மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com