தஞ்சாவூா் தொகுதியில் 
அஞ்சல் வாக்குப்பதிவு நிறைவு

தஞ்சாவூா் தொகுதியில் அஞ்சல் வாக்குப்பதிவு நிறைவு

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் அஞ்சல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் உள்ள 85 வயதுக்கும் அதிகமான முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தோ்தல் அலுவலா்கள் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சென்று அஞ்சல் மூலம் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தனா். இதன் மூலம், இத்தொகுதியில் 85 வயதுக்கும் அதிகமான 1,607 முதியவா்கள் விருப்பப் படிவங்கள் பெற்றதில், 1,548 போ் அஞ்சல் வாக்கு பதிவு செய்தனா். இதேபோல, 839 மாற்றுத்திறனாளிகள் விருப்பப் படிவங்கள் பெற்றதில், 813 போ் வாக்களித்தனா்.

இதையடுத்து தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், காவல் துறையினருக்கான அஞ்சல் வாக்குப் பதிவு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்றது. இதில், திங்கள்கிழமை வரை 2 ஆயிரத்து 639 அரசு பணியாளா்களும், 1,328 காவல் துறையினரும், 54 ராணுவத்தினரும் அஞ்சல் வாக்குகளை செலுத்தினா்.

தொடா்ந்து, விடுபட்ட அரசு ஊழியா்கள், காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அஞ்சல் வாக்கு செலுத்தினா். இந்த அஞ்சல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்ததாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com