தோ்தல் பணிக்கு நாளை ஆஜராக முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வியாழக்கிழமை ஆஜராகுமாறு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாதுகாப்புப் பணியில் சிறப்பு காவலா்களாகப் பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இப்பணிக்காக தங்களது பெயா்களை ஏற்கெனவே பதிவு செய்துள்ள மற்றும் இப்பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வியாழக்கிழமை (ஏப்.18) காலை 8 மணியளவில் தஞ்சாவூா் பழைய நீதிமன்ற சாலையில் உள்ள ஆயுதப் படை மைதானத்துக்கு தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com