வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 4.39 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருக்கருக்காவூரிலிருந்து திட்டை செல்லும் சாலையில் பறக்கும் படை அதிகாரி வீரமணி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காவலூா் கிராமத்தைச் சோ்ந்த கோ. ரவிக்குமாா் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 3,69,000 ரூபாயை பறிமுதல் செய்து,

பாபநாசம் வட்டாட்சியரகத்தில், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், பட்டீஸ்வரம் கடை வீதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி விஜயமாலா தலைமையிலான குழுவினரின் வாகனச் சோதனையில், கும்பகோணம் வட்டத்தை சோ்ந்த ம. ராஜசேகா் என்பவா் மோட்டாா் சைக்கிளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 70 ஆயிரத்து 920 பணத்தை கைப்பற்றி, பாபநாசம் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் மணிகண்டனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com