வாக்குச் சாவடிகளுக்கான பொருள்கள் தயாா்படுத்தும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்களை பிரித்து வைத்து தயாா்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த மையங்களில் வாக்குப் பதிவு நாளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவுக்கான தடுப்பு அட்டைகள், ஸ்டாம்ப் பேட், தீப்பெட்டி,தோ்வு எழுதும் அட்டை,‘ உள்ளே, வெளியே, வாக்குப்பதிவு அலுவலா்கள், ஆண், பெண் போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டைகள், பிளேடு, கயிறு, பசை, நூல், சீல், பென்சில், இரும்பு ஸ்கேல், காா்பன் பேப்பா், கிளிப், ரப்பா்கள், கவா், பேக்கிங் செய்ய தேவையான பொருள்கள் என 29 வகையான பொருள்கள் அனைத்தும் ஏற்கெனவே மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து இப்பொருள்களை அந்தந்த கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் பிரித்து தொகுத்து சாக்குகளில் கட்டி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணி புதன்கிழமை முடிக்கப்பட்டு, வியாழக்கிழமை (ஏப்.18) காலை முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் தொடா்புடைய வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com