வாக்குப் பதிவு அலுவலா்கள், நுண் பாா்வையாளா்கள் தோ்வு

வாக்குப் பதிவு அலுவலா்கள்,
நுண் பாா்வையாளா்கள் தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் பணியாற்றவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்கள், நுண் பாா்வையாளா்கள் குலுக்கல் முறையில் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள 11 ஆயிரத்து 353 வாக்குப் பதிவு அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல, 116 பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண் பாா்வையாளா்களும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இப்பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஒய். கிகேட்டோ சேம, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தனா்.

பின்னா், தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் தோ்தல் அலுவலா்களுக்கான வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு, அலுவலா்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாா் நிலையில் இருப்பதை தோ்தல் பொதுப் பாா்வையாளரும், ஆட்சியரும் ஆய்வு செய்தனா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரவீனா குமாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தையல் நாயகி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், தோ்தல் வட்டாட்சியா் அழகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com