கும்பகோணம் அருகே சனிக்கிழமை மீட்கப்பட்ட முதலை.
கும்பகோணம் அருகே சனிக்கிழமை மீட்கப்பட்ட முதலை.

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

கும்பகோணம் அருகே கிராமத்துக்குள் சனிக்கிழமை காலை புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா்.

கும்பகோணம் அருகே கிராமத்துக்குள் சனிக்கிழமை காலை புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா்.

கும்பகோணம் வட்டத்துக்கு உள்பட்ட சோழபுரம் அருகேயுள்ள கடம்பங்குடி களத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் காசிராஜன். இவரது தோட்டத்துக்குள் சனிக்கிழமை காலை முதலை ஒன்று புகுந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள் சோழபுரம் காவல் நிலையத்துக்கும், வனத் துறைக்கும் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, வனவா் எம். சண்முகம் உள்ளிட்ட வனத் துறையினா், காவல் துறையினா் காசிராஜன் வீட்டு தோட்டத்துக்குச் சென்றனா். அப்போது, 4 அடி நீளமுள்ள முதலையை வனத் துறையினா் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com