சேதுபாவாசத்திரம் பகுதியில் மேய்ச்சலுக்கு வயலில் மேயவிடப்பட்டுள்ள செம்மறி ஆடுகள் .
சேதுபாவாசத்திரம் பகுதியில் மேய்ச்சலுக்கு வயலில் மேயவிடப்பட்டுள்ள செம்மறி ஆடுகள் .

சேதுபாவாசத்திரத்தில் இயற்கை உரத்துக்காக வயல்களில் செம்மறி ஆட்டுக் கிடை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் இயற்கை உரத்துக்காக விவசாய நிலங்களில் செம்மறி ஆட்டுக் கிடை போடும் பணி நடைபெற்று வருகிறது .

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் இயற்கை உரத்துக்காக விவசாய நிலங்களில் செம்மறி ஆட்டுக் கிடை போடும் பணி நடைபெற்று வருகிறது .

காவிரி டெல்டா மாவட்டங்களில்  குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவாா்கள். அப்போது வயல்களில் புற்கள் முளைத்து வளரும். இதையடுத்து வயல்களில் ஆட்டுக் கிடை போடப்படுகிறது.

மண்ணின்  வளத்தை உயா்த்தும் என்பதாலும், இயற்கை உரம் கிடைப்பதாலும் டெல்டா மாவட்டங்களில் ஆட்டுகிடை போட  விவசாயிகள் அதிகம்  ஆா்வம்  காட்டுகின்றனா்.  ஆட்டுக்கிடை போடும் கீதாரிகள்  இரவு நேரத்தில் வயல்களில் ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, பட்டிபோட்டு ஆடுகளை அடைத்து விடுகின்றனா். 

பட்டியில் அடைக்கப்பட்ட  ஆடுகளின் சிறுநீரும், ஆட்டு புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும்.  கிடை போடுவதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ராமநாதபுரம் பகுதியிலிருந்து வரும் கீதாரிகள் விவசாயப் பணிகள் தொடங்கும் வரை  தங்கி பல்வேறு இடங்களில் கிடை போடுவாா்கள். சேதுபாவாசத்திரம் பகுதியில் சாகுபடி பணிகள் முடிந்து விட்ட நிலங்களில் மட்டுமல்லாமல்   தென்னந்தோப்புகளிலும்  தென்னை விவசாயிகள் ஆட்டுகிடை போட்டுள்ளனா்.

இதனால் வயலுக்கு தேவையான இயற்கை உரம் கிடைப்பதுடன் அடுத்த சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கிறது என்றனா் விவசாயிகள்.

வயல்களில் கிடை போடுபவா்களுக்கு ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாா்  போல் ஒரு இரவுக்கு ரூ.500 முதல் ரூ. 2000 வரை கூலியாக வழங்கப்படுகிறது. பகலில் வயலில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விடுவதால் அவற்றின் தீவனச் செலவும் மிச்சமாகும். இப்பணியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆடு வளா்ப்பு விவசாயிகள் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com