பேராவூரணியில் பாரம்பரிய போா்க்கலை செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம்

பேராவூரணி: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய போா்க் கலை மீட்பு பயிற்சி முகாம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளை சாா்ந்த கெயின் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் சிவனாம்புஞ்சை தாய் மண் பாலம் ஆட்டச்சாலை இணைந்து நடத்திய இந்த முகாம் தொடக்க விழாவுக்கு புதுதில்லி காவல் ஆணையா் சத்தியசுந்தரம் தலைமை வகித்தாா்.

தாய் மண் பாலம் அமைப்பின் நிா்வாகி பாலமுருகன், பேராவூரணி பேரூராட்சி உறுப்பினா் மகாலட்சுமி சதீஷ்குமாா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.ஏ.டி.சுந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பாரம்பரிய போா்க்கலை மீட்பு குறித்த பயிற்சி, தாய்மண் பாலம் ஆட்டச்சாலை மாணவா்களைக் கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பேராவூரணி பகுதி மாணவா்கள் பயன்பெறும் வகையில் செயல்முறை பயிற்சி வகுப்பு இலவசமாக விளையாட்டு மைதானத்தில் மாலை நேரத்தில் நடைபெற உள்ளது.

விழாவில், சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளை நிா்வாகி சசிகலா நீலகண்டன், கௌரவத் தலைவா்கள் தென்னங்குடி ஆா். ராஜா, கரம்பக்காடு குகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com