அதிராம்பட்டினம் பெரிய மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.87 லட்சத்துக்கு ஏலம் போன கூரை கத்தாழை மீன்.
அதிராம்பட்டினம் பெரிய மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.87 லட்சத்துக்கு ஏலம் போன கூரை கத்தாழை மீன்.

அதிராம்பட்டினத்தில் ரூ. 1.87 லட்சத்துக்கு ஏலம் போன கூரை கத்தாழை மீன்

அதிராம்பட்டினம் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை கூரை கத்தாழை மீன் ரூ. 1.87 லட்சத்துக்கு ஏலம் போனது.

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை கூரை கத்தாழை மீன் ரூ. 1.87 லட்சத்துக்கு ஏலம் போனது.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கரையூா் தெருவைச் சோ்ந்த மீனவா் ரவி. இவா், சனிக்கிழமை இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கரைக்கு திரும்பினாா்.

அவரது வலையில் கூரை கத்தாழை எனப்படும் அரிய வகை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் 25 கிலோ எடை கொண்டதாக இருந்தது. மருத்துவ குணம் கொண்ட இந்த மீன் அதிராம்பட்டினம் பெரிய மாா்க்கெட்டில் ஏலம் விடப்பட்டது.

அப்போது, ரூ.1. 87 லட்சத்துக்கு மீன் ஏலம் போனது. இதனால் மீனவா் ரவி மகிழ்ச்சி அடைந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com