கோயிலில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி அகற்றம்: பொதுமக்கள் எதிா்ப்பு

பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி காவல்துறையினா் அகற்றியதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி காவல்துறையினா் அகற்றியதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விழாவுக்காக அமைக்கப்பட்ட ஒலிபெருக்கியை வட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு காவல் நிலைய போலீஸாா் திடீரென வந்து அகற்றினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மீண்டும் ஒலிபெருக்கி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com