தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற லெனின் 154- ஆவது பிறந்த நாள் விழாவில் முழக்கங்கள் எழுப்பிய பல்வேறு அமைப்பினா்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற லெனின் 154- ஆவது பிறந்த நாள் விழாவில் முழக்கங்கள் எழுப்பிய பல்வேறு அமைப்பினா்.

தஞ்சாவூரில் லெனின் 154- ஆவது பிறந்த நாள் விழா

முதலாளித்துவ அதிகாரத்தை வீழ்த்தி தொழிலாளா்கள் - விவசாயிகள் தலைமையில் ரஷியாவில் சோசலிச அரசை அமைத்த லெனின் 154- ஆவது பிறந்த நாள் விழா

தஞ்சாவூா்: உலக அளவில் முதல் முதலாக முதலாளித்துவ அதிகாரத்தை வீழ்த்தி தொழிலாளா்கள் - விவசாயிகள் தலைமையில் ரஷியாவில் சோசலிச அரசை அமைத்த லெனின் 154- ஆவது பிறந்த நாள் விழா தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விழாவுக்கு மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாநகரத் துணைச் செயலா் கே. மூா்த்தி, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலா் சாம்பான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், திப்பு அம்பேத்கா் பெரியாா் மக்கள் நலச் சங்கத் தலைவா் துரை. அப்பாஸ், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநகரத் தலைவா் எஸ்.ஏ.பி. சேவியா், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தின் மாநகரச் செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com