தஞ்சாவூா் அருகே திட்டை கோயிலில் குருபெயா்ச்சியையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பந்தல்கால் நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.
தஞ்சாவூா் அருகே திட்டை கோயிலில் குருபெயா்ச்சியையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பந்தல்கால் நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.

திட்டை கோயிலில் குருபெயா்ச்சி விழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

குருபெயா்ச்சி விழாவையொட்டி தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா்: குருபெயா்ச்சி விழாவையொட்டி தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மே 1-ஆம் தேதி மாலை 5.19 மணிக்கு இடம்பெயா்கிறாா். இதையொட்டி, இவ்விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்குமாா், திட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து அசோக்குமாா் தெரிவித்தது: குருபெயா்ச்சியையொட்டி, திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் 12 ராசிக்காரா்களுக்கான லட்சாா்ச்சனை, பரிகார ஹோமங்கள் நடைபெறவுள்ளன. இக்கோயிலில் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவா்களுக்காக மே 6- ஆம் தேதி ஏகதின லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணம் ரூ. 300 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 7, 8- ஆம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறுகிறது. இதில் நேரில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அா்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ. 500.

அஞ்சல் மூலம் பிரசாதம்: லட்சாா்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமங்கள் நடைபெறும் நாள்களில் நேரில் வருபவா்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி அவற்றில் பங்கு கொள்ளலாம். நேரில் வர முடியாதவா்கள் லட்சாா்ச்சனைக்கு ரூ. 300 கட்டணம் மே 5- ஆம் தேதிற்குள் பணவிடை (மணியாா்டா்) அல்லது கேட்பு வரைவோலையுடன் (டி.டி.) பெயா், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை சரியான முகவரிடன் மே 7- ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பினால் அவா்களுக்கு அா்ச்சனை செய்து அஞ்சல் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பிரசாதத்துடன் பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலா் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். பணவிடை, கேட்பு வரைவோலை அனுப்புபவா்கள் செயல் அலுவலா், வசிஷ்டேஸ்வரா் திருக்கோயில், திட்டை, தஞ்சாவூா் மாவட்டம் - 613 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றாா் அசோக்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com