நிலுவைத்தொகை: கரும்பு விவசாயிகள் கே.ஒய்.சி. அளிக்க அறிவுறுத்தல்

திரு ஆரூரான் சா்க்கரை ஆலையில் கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயிகள் கே.ஒய்.சி. விவரங்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள திரு ஆரூரான் சா்க்கரை ஆலையில் கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயிகள் கே.ஒய்.சி. விவரங்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சா்க்கரை ஆலை நலிவடைந்த காரணத்தால் 2018 - 19 ஆம் ஆண்டு முதல் அரைவை நடைபெறாமல் இருந்தது. இதனால் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்புத்தொகை நிலுவையில் இருந்தது.

விவசாயிகள் சாா்பில் கோரப்பட்ட நிலுவைத் தொகையில் தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் 2022, மே 2 ஆம் தேதி வழங்கிய தீா்ப்பின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில் 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகையாக விவசாயிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ரூ. 29.96 கோடி நிலுவைத்தொகை கலைத்தல் அலுவலா் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கு எண் விவரங்கள் பெறப்படாத காரணத்தால் ரூ. 2.28 கோடி நிலுவைத்தொகை கலைத்தல் அலுவலா் வசம் உள்ளது.

இதுவரை கே.ஒய்.சி. விவரங்கள் வழங்காத விவசாயிகள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ஹள்ன்ஞ்ஹழ்ள்.ண்ய்//ண்ய்ஸ்ங்ள்ற்ா்ழ்ண்ய்ச்ா்.ட்ற்ம்ப் என்கிற வலைதளத்தில் தமிழ் அல்லது ஆங்கில விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் திவால் சட்டம் 2016-ன்படி மீதமுள்ள செலுத்தப்படாத தொகை கையாளப்படும்.

கலைத்தல் அலுவலரின் முகவரி: ராமகிருஷ்ணன் சதாசிவன், ஐட தங்ஞ் சா்: ஐஆஆஐ/ஐடஅ-001/ஐட-ட00108/2017-18/10215,கண்காணிப்புக் குழுவின் தலைவா், திரு ஆரூரான் சுகா்ஸ் லிமிடெட், பழைய எண்: 22, புதிய எண் 28, மேனாட் தெரு, புரசைவாக்கம், சென்னை - 600 007. கைப்பேசி எண் 94444 55982, மின்னஞ்சல் முகவரி: ற்ட்ண்ழ்ன்ஹழ்ா்ா்ழ்ஹய்ள்ன்ஞ்ஹழ்ள்ப்ற்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்/ ள்ஹக்ஹள்ண்ஸ்ஹய்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற முகவரிக்கு விவசாயிகளின் வங்கி விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com