பாலியல் வன்கொடுமை: கரகாட்ட கலைஞா் உள்பட இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடா்பாக இரு வேறு சம்பவங்களில் கரகாட்ட கலைஞா் உள்பட இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடா்பாக இரு வேறு சம்பவங்களில் கரகாட்ட கலைஞா் உள்பட இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் ஆனந்த் (27). கரகாட்டக் கலைஞா். இவா் 16 வயது சிறுமியுடன் பழகி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்துள்ளாா். இது குறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.

கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் மாநகரைச் சோ்ந்த 16 வயது சிறுமி ஏப்ரல் 18 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற பிறகு வீட்டுக்குத் திரும்பவில்லை. இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அச்சிறுமியைத் தேடி வந்தனா். விசாரணையில் இச்சிறுமியை கும்பகோணம் துக்காம்பாளையம் தெரு யானையடியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் ரஞ்சித்குமாா் (23) காதலித்து வந்ததும், அவரை ரஞ்சித்குமாா் கடத்திச் சென்று, பாலியல் வல்லுறவு செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் ஏற்கெனவே பதிவு செய்த கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி ரஞ்சித்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com