தஞ்சாவூா் -  கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் முடிக்கப்படாத மழைநீா் வடிகால் பணிகள்.
தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் முடிக்கப்படாத மழைநீா் வடிகால் பணிகள்.

மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

பாபநாசம் வட்டார பகுதியில் தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 79.42 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் தஞ்சாவூா் பள்ளிஅக்ரஹாரத்தில் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழியில் தொடங்கி தஞ்சாவூா் நோக்கி ஒரு பிரிவாகவும் நடைபெற்றது.

மேலும் தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் வட்டார பகுதிகளான பசுபதி கோவில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூா், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலைத்துறை, சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வடிகால் பணிகள் நடைபெற்றது. இதில் பாபநாசம், திருப்பாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மழை நீா் வடிகால் பணிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. குறுகிய சாலையாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அவதிக்குள்ளாகின்றனா். ஆகவே, மழை நீா் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com