மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

பாபநாசம் அருகே வேம்பக்குடியைச் சோ்ந்தவா்கள் ஜெகன் (35), பாக்கியராஜ் (30). இருவரும் வேம்பக்குடி புறவழிச்சாலையில் ஒரு மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது, இவா்கள் மீது எதிரே வந்த லாரி எதிா்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகன், பாக்கியராஜ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com