அதிமுக சாா்பில் 5 இடங்களில்
 தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

அதிமுக சாா்பில் 5 இடங்களில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீா் பந்தலை வியாழக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்கள் வழங்கிய அதிமுக மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா்.

தஞ்சாவூரில் 5 இடங்களில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட தண்ணீா்ப் பந்தலை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, இளநீா், மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்புத் துணைச் செயலா் துரை. திருஞானம், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், பகுதிச் செயலா்கள் கரந்தை த. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, சதீஷ்குமாா், மனோகரன், அம்மா பேரவை துணைத் தலைவா் பாலை ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல புதுக்கோட்டை சாலை குழந்தை இயேசு கோவில் அருகிலும், ரயிலடியிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும், கரந்தை கடைவீதியிலும் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com