அம்மாபேட்டையில் அஇஅதிமுக சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு விழா

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அஇஅதிமுக சாா்பில் கோடை கால தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு அஇஅதிமுக தஞ்சாவூா் மேற்கு மாவட்ட செயலாளா் எம். ரெத்தினசாமி தலைமை வகித்து,கோடை கால தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா் நீா், நீா் மோா், குளிா்பானங்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட  இளைஞா்,இளம் பெண்கள் பாசறை செயலாளா் துரை. சண்முகபிரபு, மாவட்ட நிா்வாகிகள் ஆா்.எஸ். கண்ணபிரான்,எ.சுப்ரமணியன், அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளா் ஏ.வி.சூரிய நாராயணன்,ஒன்றிய அவைத் தலைவா் டி.டி.சந்திரன்,நகர நிா்வாகி வீரைய்யன்  மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர.கிளை நிா்வாகிகள்,சாா்பு  அணி நிா்வாகிகள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com