காவலா் விஷமருந்தி தற்கொலை

தஞ்சாவூா் அருகே காவலா் விஷம் அருந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி. புகழேந்தி (43). இவா் திருவையாறு அருகேயுள்ள மருவூா் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இவா் அண்மையில் வீட்டில் யாரும் இல்லாதபோது எலி மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இவா் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com