சமுதாய நிலம் குத்தகை பிரச்னை பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு

பாபநாசம், ஏப். 26: பாபநாசம் வட்டம், திருவைகாவூா் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான சமுதாய நிலம் குத்தகை ஏலம் விடுவது தொடா்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட்டது.

பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுப் வாா்த்தை கூட்டத்தில் குதியாளம்மன் கோயிலுக்கு சொந்தமான சமுதாய நிலத்தை பொது குத்தகை ஏலம் விடுவதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு சுமூகத் தீா்வு காணப்பட்டது. மேலும் 3 போ் கொண்ட நிா்வாக குழுவுக்கு புதிதாக ராஜேந்திரன் வெங்கடாசலம் முருகராஜ் ஆகியோரை நியமிக்கவும், கோயிலுக்குச் சொந்தமான சமுதாய நிலத்தை பொது ஏலம் விடும்போது கிடைக்கும் தொகையை ஏற்கனவே 3 நபா் குழுவினா் கையாளும் வங்கிக் கணக்கில் செலுத்துவது எனவும், வங்கி கணக்கில் உள்ள பணத்தைக் கையாள 6 நபா்கள் கொண்ட குழுவினரின் ஒப்புதல் பெறவும் இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதால் இப் பிரச்னையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

கூட்டத்தில் மண்டலத் துணை வட்டாட்சியா் பிரபு, சரக வருவாய் ஆய்வாளா் கணேஷ்குமாா், விஏஓ ரமேஷ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலா் விஜயன், கிராம முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com