தலையாட்டி பொம்மை செய்முறை பயிற்சி முகாம்

தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் தலையாட்டி பொம்மைகள் குறித்த செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இன்றைய தலைமுறையினரும் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்வதற்காகவும், அதற்கான ஆதரவை ஊக்குவிப்பதற்காவும் நடத்தப்பட்ட இப்பயிற்சியை தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை கலைஞா்கள் பாலு, மணிகண்டன் ஆகியோா் வழங்கினா்.

இதில், சிறியவா்கள் முதல் முதியவா்கள் வரை 75-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு தலையாட்டி பொம்மையை அவா்களே செய்து வண்ணம் தீட்டினா்.

நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலா் சங்கா், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா், மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் செல்வம், தஞ்சை தாரகைகள் ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com