மகிமாலை ஊராட்சியில் திட்ட பணிகள் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், மகிமாலை ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜய் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதி ரூ. 5 லட்சம் மதிப்பில்  3 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் பழுது நீக்கம்  செய்யும் பணி, ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இதேபோல, மலையபுரம்  கிராமத்தில் ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டடம் கட்டுமான பணிகளையும் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய் ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com