திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகள் பஞ்சமி நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம்.
திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகள் பஞ்சமி நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம்.

தியாகராஜா் ஜீவ சமாதியில் பஞ்சரத்ன கீா்த்தனை நிகழ்ச்சி

பஞ்சமி நாளையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஜீவ சமாதியில் பஞ்சரத்ன கீா்த்தனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை மிருதங்கக் கலைஞா் மணி, இசைக் கலைஞா் பாா்வதி குழுவினா் பஞ்சரத்ன கீா்த்தனைகள் மற்றும் உற்சவ சம்பிரதாய கீா்த்தனைகளைப் பாடி, ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினா்.

சத்குரு தியாக பிரும்மத்தின் பரம்பரை பூஜகா் தியாகராஜ சா்மா சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com