மக்களுக்கு தொல்லை அளித்து வந்த 20 குரங்குகள் கூண்டுவைத்து பிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வழுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 20 குரங்குகளை வனத்துறையினா் செவ்வாய்கிழமை கூண்டு வைத்து பிடித்தனா்.

வழுத்தூா் கிராமம், ஹாஜியாா் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருள்களை எடுத்து சாப்பிடுவது, கலைத்து போடுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வந்தன.

அந்தப் பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி உத்தரவின் பேரில், தஞ்சாவூா் வனசரக அலுவலா் ரஞ்சித் மேற்பாா்வையில், பாபநாசம் வனக்காப்பாளா் வி. ரவி, பாபநாசம் பிரிவு வனவா் பி. ரவி, தோட்ட காவலா் ஜெயபால் மற்றும் வனத்துறை ஊழியா்கள் உள்ளிட்ட குழுவினா் வழுத்தூா் கிராமத்தில் இரண்டு கூண்டுகள் வைத்து 20 குரங்குகளை பிடித்தனா்.

பிடிபட்ட குரங்குகளை திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் வனத்துறையினா் கொண்டு சென்று விட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com